தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின்கசிவினால் டெல்லி ஷோரூமில் பயங்கர தீ விபத்து! - பயங்கர தீ விபத்து

டெல்லி: ஹார்லி டேவிட்சன் ஷோ ரூமில் இன்று காலை 6 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Fire breaks out
Fire breaks out

By

Published : Jan 2, 2021, 2:30 PM IST

டெல்லி - மோதி நகரில் அமைந்துள்ள ஹார்லி டேவிட்சன் ஷோ ரூமில் இன்று காலை 6 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இரண்டாவது மாடியிலிருந்த இரவு விடுதிக்கு வந்த 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹார்லி டேவிட்சன் ஷோ ரூம் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட மின்கசிவே இந்தத் தீவிபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இரண்டாவது மாடியைத் தவிர முதல் மற்றும் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள கட்டடங்களில் பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details