தென்கிழக்கு டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்கிழக்கு துணை காவல் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா, தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
"துக்ளகாபாத் பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் தீப்பற்றியது. தகவலறிந்து அனைத்து காவல்துறை அலுவலர்களும் உடனடியாக இங்கு வந்தனர். இது அதிகம் குடிசை உள்ள பகுதி என்பதால் தீ மளமள வென பரவி 1000 குடிசைகள் எரிந்து நாசமாயின.