மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஜிபி சாலையில் அமைந்துள்ள ஆர்கேடியா வணிக வளாகத்தில், இன்று அதிகாலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், ஆர்.டி.எம்.சி பணியாளர்களும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.
சுமார் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்தத் தீ விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், மருந்துகள், இனிப்புகள், மதுபானம் போன்றவற்றை விற்கும் ஆறு கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து எப்படி ஏற்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.