தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எண்ணெய் குழாய் வெடித்து ஆற்றில் பற்றி எரியும் தீ! - காணொலி - புர்ஹி டிஹிங் ஆறு

திஸ்பூர்: திப்ருகார் அருகே புர்ஹி டிஹிங் ஆற்றுப்பகுதி வழியாகச் செல்லும் எண்ணெய் குழாய் வெடித்ததால் தீப்பிடித்து அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

Burhi Dihing river
Burhi Dihing river

By

Published : Feb 3, 2020, 1:08 PM IST

அசாம் மாநிலத்திலுள்ள எண்ணெய் சத்திகரிப்பு நிலையத்திலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக திப்ருகார் மாவட்டத்திலுள்ள புர்ஹி டிஹிங் ஆற்றுப்பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திடீரென எண்ணெய் குழாய் வெடித்தது. இதனால் ஆற்றின் மேற்பரப்பில் தீப்பற்றி ஏரிவதோடு, கரும் புகை மண்டலமாகவும் அப்பகுதி காணப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஈடுபட்டுவருகின்றனர்.

எண்ணெய் குழாய் வெடித்து ஆற்றில் பற்றி எரியும் தீ

அந்த ஆறு வழியாக செல்லும் எண்ணெயைத் திருடுவதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் அதற்கு தீ வைத்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து எரிந்துவரும் தீயால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை

ABOUT THE AUTHOR

...view details