தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தீ: 2 பூக்கடைகள் எரிந்து நாசம் - fire at puducherry Gouber market

புதுச்சேரி: பழமைவாய்ந்த புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பூக்கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

puducherry gouber market
puducherry gouber market

By

Published : Jun 23, 2020, 10:21 AM IST

புதுச்சேரி வியாபார பகுதியான நேரு வீதியில் அமைந்துள்ள பெரிய மார்க்கெட் பிரெஞ்சு காலத்திலிருந்தே செயல்பட்டுவருகிறது. இங்கு பூக்கடைகள், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், மீன் அங்காடிகள் உள்ளிட்டவை இயங்கிவருகின்றன.ட

இந்நிலையில், அங்கு இயங்கிவரும் ஒரு பூக்கடையில் திடீரென நேற்று மாலை தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

கொளுந்துவிட்டு எரிந்த இந்தத் தீ அருகில் உள்ள இன்னொரு பூக்கடைக்கும் பரவவே, வியாபாரிகள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்புப் படையினர் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்தத் தீ விபத்தில் இரண்டு பூக்கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்தின்போது அங்கிருந்த வியாபாரிகள் உடனே வெளியேறிவிட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : இன்றுமுதல் சென்னை-மதுரை விமான போக்குவரத்து ரத்து!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details