மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பண்டாரா அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை (ஜன. 09) தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. சுனில் மெந்தே, "தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனைக்கு விஜயம் செய்த மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், ஊழியர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் அவ்வாறு செய்யவில்லை.
இந்தச் சம்பவம் தொர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், விரிவாக விசாரணை மேற்கொள்ளவும் வலியுறுத்தி பாஜக சார்பில் பாண்டாராவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க:காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் 64 விழுக்காடு சரிந்துள்ளது-மத்திய அரசு