திருவனந்தபுரம் வஜுதகாட் கலாபவன் தியேட்டர் அருகே உள்ளது ஸ்ரீவத்ஸம் ஷாப்பிங் மால். இந்த ஷாப்பிங் மாலில் இருந்து அதிகளவில் புகை வருவதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாலில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றினர்.
''கேரளாவில் பிரபல ஷாப்பிங் மாலில் தீவிபத்து'' - Supermarket items. kids dress items damages
திருவனந்தபுரம்: ஸ்ரீவத்ஸம் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கேரளாவில் உள்ள ஷாப்பிங் மாலில் தீ விபத்து
பின்னர் தண்ணீரை பீச்சியடித்து சுமார் ஒரு மணித்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் முதல் தளத்தில் இருந்த வீட்டு உபயோக பொருட்களும், இரண்டாவது தளத்திலிருந்த சிறுவர்களுக்கான உடைகளும் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து திருவனந்தபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை நகைக்கடையில் தீ விபத்து: நல்வாய்ப்பாக தப்பிய நகைகள்...!