பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். தீ, தொழிற்சாலை முழவதும் பரவியிருந்ததால், பல மணி நேர போராட்டதிற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளன.
இரு இடங்களில் தீவிபத்து! - பஞ்சாப் மாநிலம் லூதியானா
பஞ்சாப் மாநிலம் லூதியானா, கொல்கத்தா ஆகிய இரு இடங்களிலும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இரு இடங்களில் தீவிபத்து!
மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். தற்போது வரை உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.