மக்களவை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திடீரென தீ விபத்து மாலை ஐந்து மணி அளவில் ஏற்பட்டது.
டெல்லியில் சோனியா காந்தியின் தேர்தல் பரப்புரையில் திடீர் தீ விபத்து - காங்கிரஸ் தேர்தல் பரப்புரை
டெல்லி: சோனியா காந்தி தலைமையில் ஆர்.கே.புரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் சோனிய காந்தியின் தேர்தல் பரப்புரையில் இடத்தில் திடீர் தீ விபத்து
தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் விரைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து காரணம் குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Apr 28, 2019, 10:16 PM IST