தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப்பில் பட்டாசுத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து - தீ விபத்து

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: காவல் துறை விசாரணை!
Cracker industry fire accident

By

Published : Aug 8, 2020, 8:48 PM IST

பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர், பி.டி.ஐ நகர் அருகே உள்ள இபான் கலா என்னும் கிராமத்தில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (ஆக. 8) திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் தொழிற்சாலைக் கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்தன. இதில், தொழிற்சாலையில் இருந்த அனைத்துப் பட்டாசுகளும் தீயில் கருகின. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பஞ்சாப் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து

பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர். மின்கசிவின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என பெரும்பாலானோர் தெரிவித்த நிலையில், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details