தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனவாதம் பேசியதாகக் கூறி ஏஐஎம்ஐஎம் தலைவர் மீது எப்ஐஆர்!

கல்புர்கி: சிஏஏ எதிர்ப்பு பேரணியில் இனவாதம் பேசியதாகக் கூறி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சித் தலைவர் வாரிஸ் பதான் மீது எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

FIR registered against Waris Pathan for 'communal speech'
FIR registered against Waris Pathan for 'communal speech'

By

Published : Feb 22, 2020, 10:40 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி முற்றிலுமாக எதிர்த்துவருகிறார். சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில், சிஏஏ எதிர்ப்பு கூட்டங்களையும் அவர் நடத்திவருகிறார்.

அந்த வகையில், பெங்களூரு அருகே கல்புர்கியில் கடந்த பிப்.19ஆம் தேதி அக்கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஓவைசி, வாரிஸ் பதான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய வாரிஸ் பதான், இந்தியாவிலுள்ள 15 கோடி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்தால், 100 கோடி மக்களைக் காட்டிலும் பெரிய சக்தியாக உருவெடுப்போம் என்றார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு, பாஜக தலைவர்கள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் தன் கட்சித் தலைவர் ஒருவர் இனவாத அடிப்படையில் பேசும்போது, ஓவைசி மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் கூறினர். இந்த விவகாரம் பெரிதாகவே பதானை மறு உத்தரவு வரும் வரை செய்தியாளர்களிடம் பேசக் கூடாது என ஓவைசி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இனவாதம் பேசியதாகக் கூறி பதான் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) கல்புர்கி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல் (153ஏ) ஆகிய இரு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த பதான், தானோ அல்லது தான் சார்ந்த கட்சியோ மக்களை சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்துவதை ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை எனக் கூறியுள்ளார். தான் பேசிய கருத்து முற்றிலும் வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவர் வருத்தம் தெரிவித்தார்.

முன்னதாக, இப்பேரணியில் கலந்துகொண்ட அமுல்யா என்ற மாணவி, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டத்தையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டார். ஓவைசி மாணவியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, மாணவியின் முழக்கத்தை எதிர்த்து நேற்று இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தில், மற்றொரு மாணவியும் அதே முழக்கத்தை எழுப்பினார். அவரையும் நேற்று காவல் துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமிட்ட மற்றொரு மாணவி கைது!

ABOUT THE AUTHOR

...view details