ட்விட்டர் பக்கத்தின் மூலம் தவறான தகவலைப் பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு - Praveen KV advocate karnataka

12:45 May 21
பெங்களூரு: பிரதமர் நிவாரண நிதி தொடர்பாக அவதூறு பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கரோனா நிவாரணத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பி.எம்.கேர்ஸ் ஃபண்ட்(PM CARES FUND) என்னும் பிரதமர் சிறப்பு நிதி குறித்து அவதூறு தகவலை பரப்பியதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரத்யேக ட்விட்டர் கணக்கு இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட கணக்கை சோனியா காந்தி இயக்குவதாகவும், அதிலிருந்து பிரதமர் நிதி குறித்து அவதூறு தகவல் பரப்பப்படுவதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:காங்கிரஸ் கனவான நியாய் திட்டம் சத்தீஸ்கரில் தொடக்கம்