நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் சார்பில் மண்டியா மக்களவைத் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளரான சுமலதாவிடம் தோல்வியை தழுவினார். இதன்பிறகு மைசூரிலுள்ள ஓட்டலுக்கு நிகில் சென்றதாகவும், பிறகு அங்கு சில விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டதாக விஸ்வவாணி என்ற கன்னட நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
நிகில் குறித்து சர்ச்சை செய்தி; கன்னட பத்திரிகை ஆசிரியர் மீது வழக்கு! - senior journalist
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மகன் நிகில் குறித்து சர்சைக்குரிய விதத்தில் செய்தி வெளியிட்ட 'விஜயவாணி' செய்திதாள் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிகில் குறித்து சர்சை செய்தி
இந்த செய்திக்கு முதலமைச்சர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தநிலையில் விஸ்வவாணி பத்திரிகையின் ஆசிரியர் விஸ்வேஸ்வர் பட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மஜத கட்சியினர் ஸ்ரீராமபுரம் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.