ஆபாச உள்ளடக்கங்களை பரப்புவதாக கூறி ஹாட்ஷாட், பிளிஸ் மூவிஸ், ஃபெனியோ, குக்கூ, நியோஃப்ளிக்ஸ், உலு, ஹாட்மாஸ்டி, சிக்கூஃப்ளிக்ஸ், தயாரிப்பு நிறுவனம் ஆல்ட் பாலாஜி, பிரைம்ஃபிக்ஸ் மற்றும் சில வலைத்தளங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் மகாராஷ்டிரா சைபர் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
பல இளம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை படம்பிடித்து சர்வதேச அளவில் விற்பனை செய்த ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த செய்தியை ஊடகம் வாயிலாக பார்த்த இளைஞர் ஒருவர், இது போன்ற வீடியோக்கள் பல இளம் சிறுமிகளின் வாழ்க்கை அழிக்க வழிவகுத்துள்ளது என்றும் பல்வேறு வலைத்தளங்களில் பாலியல் ரீதியாக வெளிப்படையான ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவாதாகவும் அந்த இளைஞர் மகாராஷ்டிரா சைபர் துறையில் புகார் அளித்தார்.