தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ப்ரியங்கா காந்திக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு! - ப்ரியங்கா காந்திக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல்

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்திக்கு ட்விட்டர் வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

fir-against-twitter-user-for-threatening-to-shoot-priyanka-vadra
fir-against-twitter-user-for-threatening-to-shoot-priyanka-vadra

By

Published : Apr 20, 2020, 12:14 PM IST

சில நாள்களுக்கு முன்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, மாநிலத்தின் பொருளாதார பிரச்னையை சரி செய்வதற்கு உடனடியாக வல்லுநர்களைக் கொண்டு பொருளாதாரத்தை மீட்பதற்கான பணிக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்த்தி பாண்டே என்பவர், ப்ரியங்கா காந்தியை சுட்டுக்கொலை செய்வேன் என பின்னூட்டமிட்டிருந்தார். இதையடுத்து காங்கிரஸ் தொண்டர் பங்கஜ் திவேதி என்பவர் பாஸ்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

பின்னர் ப்ரியங்கா காந்திக்கு மிரட்டல் விடுத்தவர் மீது இந்திய தண்டனைப் பிரிவுச் சட்டம் 506, 66 ஆகிவ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படவில்லை.

இதையும் படிங்க:உஜ்வாலா யோஜனாவும்... எரிவாயு இல்லாத உருளையும்....!

ABOUT THE AUTHOR

...view details