தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக வாட்ஸ்அப்பில் பதிவு:  டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு! - வாட்ஸ்ஆப் மருத்துவப் பணியாளர்கள் மீது வழக்கு

ஜெய்ப்பூர் : குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக, வாட்ஸ்அப்பில் உரையாடிய ராஜஸ்தான் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட மூன்று மருத்துவப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

whatsapp
whatsapp

By

Published : Jun 8, 2020, 3:03 PM IST

Updated : Jun 9, 2020, 2:16 AM IST

ராஜஸ்தான் மாநிலம், சூரு மாவட்டத்தில் ஸ்ரீசந்த் பாரதியா ரோக் நிதான் கேன்ரா என்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள், 'பாரதியா ரைஸ்' என்ற வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக உள்ளனர். இந்த மருத்துவமனைக்கு வரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மாட்டோம் என, அக்குழுவில் சிலர் உரையாடியதாகக் கூறப்படுகிறது.

இந்த உரையாடல்களின் படநகல்கள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சூரு மாவட்ட காவல் துறையினர், அக்குழுவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் உட்பட மூன்று மருத்துவப் பணியாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணிபுரியும் மருத்துவமனையைச் சேர்ந்த சுனில் செளத்ரி என்ற மருத்துவர் இதற்கு மன்னிப்பு கோரி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் குற்றம்சாட்டப்பட்ட சக ஊழியர்களின் வாட்ஸ்அப் உரையாடல் எந்த சமூகத்தை அவமதிக்கும் உள்நோக்கத்தில் பதிவிடவில்லை என்றும், குறிப்பிட்ட எந்த சமூகத்தினருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டெல்லி அரசின் உத்தரவு தீவினையானது - மாயாவதி

Last Updated : Jun 9, 2020, 2:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details