பீம் ஆர்மி பாரத் ஏக்தா மிஷனின் நிறுவிய தினத்தைக் கொண்டாடும் விதமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் உள்ள சதர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டெல்லி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஜூலை 21ஆம் தேதியன்று பொதுமக்கள் ஒன்று கூடினர். இதில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக சஹரன்பூர் காவல் கண்காணிப்பாளர் வினீத் பட்நகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
"புதிதாக கட்சி அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அக்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுபோன்று விழா நடத்தப்பட்டால் மக்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதை பொருட்படுத்தாமல் அவர்கள் திட்டமிட்டபடி செயல்பட்டனர்.
ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவில் சந்திரசேகர், பீம் ராணுவத்தின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதற்காக அதிகப்படியான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் ஊரடங்கு உத்தரவை மீறி உள்ளனர்.
அதேசமயம் அனைத்து செயல்பாடுகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெயர் தெரிந்த 25 பேர், பெயர் தெரியாத பலர் என தலைவர் சந்திர சேகர் ஆசாத், அதன் தேசியத் தலைவர் வினய் ரத்தன், இதில் கலந்து கொண்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.