மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பாஜகவினர் நடத்திய மாபெரும் பேரணியில் அக்கட்யின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். நகரின் முக்கியச் சாலைகளில் நடைபெற்ற இந்தப் பேரணி வித்யாசாகர் கல்லூரி அருகே வந்தபோது திருணாமுல் - பாஜகவினர் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது புகழ்பெற்ற எழுத்தாளர் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.
அமித் ஷா மீது எஃப்.ஐ.ஆர். பதிவு! - BJP
கொல்கத்தா: நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் மேற்கு வங்க எழுத்தாளர் வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மீது கொல்கத்தா காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
![அமித் ஷா மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3285525-225-3285525-1557898390400.jpg)
amitshah
இதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வித்தியாசாகர் கல்லூரி மாணவர் ஒருவர், கொல்கத்தாவின் அம்ஹெர்ஸ்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் அமித் ஷா மீது முதற்கட்ட தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.