மத்திய வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய ஏப்ரல் மற்றும் மே மாத நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு 2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்திற்கான வரிகளிலிருந்து மாநிலத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய பங்காக ரூ.92,077 கோடியை விடுவித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு உரிய வகையில் நிதிப்புழக்கம் தேவை என்ற கண்ணோட்டத்தில் இந்த தொகை உடனடியாக விடுவிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.