இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் மாநில அரசுகளுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் மத்திய அரசு, தங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
இந்நிலையில், திங்கள்கிழமை ரூ. 6,195 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானிய நிலுவைத் தொகையை 14 மாநிலங்களுக்கு நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "மே 11, 2020ஆம் ஆண்டு 15ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.