புதுச்சேரி:புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் மாணவர்களுக்கு நுண்கலை குறித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்தாண்டு நுண் கலைதுறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நுண்கலையின் அற்புதங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் இன்று (பிப்ரவரி 6) தொடங்கியது.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கழகத்தில் நுண்கலை பயிற்சி முகாம் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் மாணிக்கவாசகம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். முதல்நாளில் ஓவியமும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டன. முக உருவம் வரைவது குறித்த நேரடி செய்முறை விளக்கமும் இன்று அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:அரிசி கொள்முதல் டெண்டர்! - மத்திய, புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க ஆணை!