நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் காரணமாக மே 3ஆம் தேதி வரை லாக்டவுனை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், பலரின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பில்லாத பகுதிகளில் தக்க முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, இயல்பு நிலையில் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் இயக்கத்தை உறுதிசெய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் காடுகள், மலைப்பகுதிகளில் நடைபெறும் விவசாயச் செயல்பாடுகள் அனைத்தும் தங்குதடையின்றி இயங்க மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது. இதன்மூலம் மூங்கில், தென்னை, கோகோ, தேயிலை உள்ளிட்ட விவசாயத் தொழில்களில் ஈடுபடும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
மேலும், கிராமப்புற மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நபார்டு, கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படவும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பிற்காக பெல் நிறுவனத்துடன் கை கோர்த்த எய்ம்ஸ் நிறுவனம்