கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க மக்கள் ஊரடங்கு மேலும் 21 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஏழைகளின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தை அறிவித்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் பூட்டுதலின் தாக்கத்தை சமாளிக்க அரசாங்கம் அறிவித்த நிதி தொகுப்பு ஏழைகளின் உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய நீண்ட தூரம் பயணிக்கும்.
ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சோதனை நேரங்களை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதில் உறுதியாக உள்ளோம். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு அவர்களின் உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் நீண்ட தூரம் பயணிக்கும்” என்றார்.