நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25ஆம் தேதி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் மே31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆள்குறைப்பு, ஊதியம் பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நிகழ்ந்த ஆள்குறைப்பு, ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் உள்ளிட்ட தரவுகளைச் சேகரிக்க தொழிலாளர் அமைச்சகத்தை, மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளுக்கு கடன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள நிதி அமைச்சகம், இந்தச் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் உயிரிழந்தார்