தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவு: செய்தியாளர்களைச் சந்திக்கும் நிதியமைச்சர் - செய்தியாளர்களைச் சந்திக்கும் நிதியமைச்சர்

டெல்லி: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

Finance Minister Nirmala Sitharaman to brief the media at 1pm today.
Finance Minister Nirmala Sitharaman to brief the media at 1pm today.

By

Published : Mar 26, 2020, 12:31 PM IST

Updated : Mar 26, 2020, 12:56 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறு, குறு தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் ஒரு மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களைச் சமாளிக்கும்பொருட்டு வருமானவரி தாக்கல்செய்ய கால நீட்டிப்பு, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பில் தளர்வு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்றைய சந்திப்பின்போது, சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் ஏதேனும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: சிறு, குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சலுகைகள்!

Last Updated : Mar 26, 2020, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details