தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'திருக்குறள் வழியில் நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி' - நிதியமைச்சர் புகழாரம் - Finance Minister nirmala sitharaman quoting Thirukkural lines

டெல்லி: ‘பிணியின்மை’ என்று தொடங்கும் திருக்குறள் வரிகளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர், அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நாட்டை ஆட்சி செய்துவருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

Finance Minister nirmala sitharaman quoting Thirukkural lines
Finance Minister nirmala sitharaman quoting Thirukkural lines

By

Published : Feb 1, 2020, 12:50 PM IST

Updated : Feb 1, 2020, 1:06 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். வேளாண் துறைக்கான பட்ஜெட்டை அறிவிக்கும்போது, ’பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர், தற்போது திருக்குறள் வரிகளையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

அவர் கூறிய திருக்குறள் வரிகள் பின்வருமாறு:

”பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து”

இந்தக் குறளைக் கூறி நாட்டை பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்துவருவதாகக் கூறினார். நிதியமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டனர். ஆனால், நிதியமைச்சர் குறளை மீண்டும் வாசித்து அதற்கான விளக்கத்தையும் கூறினார்.

குறள் விளக்கம்: நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், இன்பம், பாதுகாப்பு இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்களாக விளங்குகின்றன.

இவையனைத்தையும் பின்பற்றி நாடு சிறப்பாக முன்னேறிவருவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: வேளாண்மைத் துறைக்கான சிறம்பம்சங்கள்!

Last Updated : Feb 1, 2020, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details