கரோனா பாதிப்பால் நாட்டில் உள்ள அசாதாரண நிலையை சமாளிக்கும்விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய நிதி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவசர நிதி ரூ.1.7 லட்சம் கோடி: 80 கோடி ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் - 1.7 lakh crore package corona virus
டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைச் சமாளிக்க 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு அவசர கால சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
Nirmala Sitharaman
முக்கிய அறிவிப்புகள்:
- சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு
- ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசம்.
- உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள், இடம்பெயர்ந்தோர்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- யாரும் பசி, பட்டினியோடு இருந்துவிடக் கூடாது என்பதற்காக உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கிலேயே வழங்கப்படும், வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டங்களின் அடிப்படையில், பொருள்கள் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்
- முறைசாரா தொழிலாளர்களுக்கு, இரண்டாயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும், இதன்மூலம் ஐந்து கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறும்.
- 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு
- விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின்கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும், 8.69 கோடி விவசாயிகள் இதன்மூலம் நேரடியாகப் பயன்பெறுவர்.
- விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்
- 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின்கீழ், மாதந்தோறும் 500 ரூபாய் என அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்
- உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு உருளை வழங்கப்படும்
- 100 ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில், ரூ.15000-க்கும் கீழ் 90 விழுக்காட்டினர் சம்பளம் வாங்கும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்கு அவர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 24 விழுக்காடு நிதியை அரசு செலுத்தும்.