தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2020, 4:03 PM IST

ETV Bharat / bharat

விசாக் துயரம் : ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த நிதி அமைச்சர்

விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் 9 பேர் உயிரிழந்து, ஆயிரக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

விசாகப்பட்டினம், கோபாலப்பட்டினம் ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலி வினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த எரிவாயு கசிவில் 10 பேர் உயிரிழந்தும், 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, ஆலையில் இருந்து கசிந்த ஸ்டைரீன் எனும் வாயுவால்தான், மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு கண்கள், தோல் மற்றும் மூக்கில் எரிச்சல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஆந்திர மாநில அரசுக்கு பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டிய நிலையில், தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பாலிமர் ஆலையில் இருந்து எரிவாயு கசிந்த செய்தி கவலை அளிக்கிறது. என்.டி.ஆர்.எஃப். குழு மாநில அரசுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு வருகிறது. மக்கள் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் எனது பிரார்த்தனைகள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க :விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details