மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஆந்திரா மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலும் ஏப்ரல் 11ஆம் தேதி நடக்கவுள்ளது. ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 16ஆம் தேதி அறிவித்தது.
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் -உம்மன் சாண்டி - வேட்பாளர்
டெல்லி: ஆந்திரா மாநிலம் சட்டப்பேரவை தேர்தலுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
ஆந்திராவில் முக்கிய கட்சியாக கருதப்படும் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் கூட வெளியிடாமல் காலம் தாழ்த்திவந்தது. இந்நிலையில், கேரளா முன்னாள் முதலமைச்சரும், ஆந்திரா மாநிலம் காங்கிரஸ் மேலிட பொருப்பாளருமான உம்மன் சாண்டி, காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தேர்தல் குழு இறுதி கட்ட வேட்பாளரை தயார் செய்துவிட்டதாகவும், விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.