தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி? - பாலிசிபஜார்

டெல்லி: கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை சிரமமின்றி பெற, புதிய தரவுகளை பொது காப்பீட்டு கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது.

coronavirus health insurance
coronavirus health insurance

By

Published : Jul 7, 2020, 7:29 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை நாடு முழுவதும் சுமார் ஏழு லட்சம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆகும் மருத்துவச் செலவுகளுக்காக நுகர்வோர்கள், காப்பீட்டு நிறுவனங்களைத் தொடர்புகொள்வது சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், எவ்வித நிலையான மருத்துவச் சிகிச்சை முறையும் இந்தத் தொற்றுக்கு வரையறுக்கப்படவில்லை. இதனால் தனியார் மருத்துமனைகள் அதிகப்படியான கட்டணங்களை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை பாலிசிதாரர்கள் எளிதில் க்ளைம் செய்ய ஏதுவாக பொது காப்பீட்டு கவுன்சில் புதிய விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது. இது கோவிட் -19 நோயாளிகளுக்கு ஆகும் செலவுகளை எவ்வாறு க்ளைம் செய்யலாம் என்பது குறித்த தெளிவான தகவல்களை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா சிகிச்சைக்கு பல்வேறு மாநில அரசுகள் வெளியிட்ட கட்டண விகிதங்களையும், துறை சார்ந்த வல்லுநர்களுடனான ஆலோசனைகளுக்குப் பின்னரே இந்த விளக்கப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொது காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாலிசிபஜார்.காமின் சுகாதார காப்பீட்டுத் தலைவர் கூறுகையில், “பல விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த விளக்கப்படத்தைப் பொது காப்பீட்டு கவுன்சில் உருவாக்கியுள்ளது. இவை வாடிக்கையாளர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும், மேலும் இவை முறையாகச் அமல்படுத்தப்பட்டால், இது பாலிசிதாரர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்" என்றார்.

எந்த மாநிலங்களுக்கு இந்த விகிதங்கள் பொருந்தும்?

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களான சிகிச்சை கட்டணங்களை அரசு வெளியிட்டுள்ள மாநிலங்களில், அந்தக் கட்டணம் பின்பற்றப்படும். அவ்வாறு எவ்வித அறிவிப்பையும் வெளியிடாத மாநிலங்களில் பொது காப்பீட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள இந்தக் கட்டணம் பின்பற்றப்படும்.

கரோனா செலவுகளுக்கான மருத்துவக் காப்பீடு விவரம்

வரும் காலங்களில் மற்ற மாநிலங்களும் சிகிச்சைக்கான கட்டணத்தை வெளியிடும் பட்சத்தில் அந்தத் தொகையே பின்பற்றப்படும் என்று பொது காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

விகிதங்களை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

தொற்றின் தீவிரம் (மிதமான தொற்று, கடுமையான தொற்று, மிகவும் கடுமையான தொற்று), மருத்துவமனையின் வகை ( உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில்) மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள இடம் (மெட்ரோக்கள், மாநில தலைநகரங்கள், பிற பகுதிகள்) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுள்ளது.

பொது காப்பீட்டு கவுன்சில் முன்மொழிந்துள்ள உச்சவரம்புகள்:

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவைக்கு அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை வசூலிக்கலாம். வென்டிலேட்டர் இல்லாத ஐ.சி.யு. படுக்கைகளாக இருந்தால் 15,000 ரூபாய் வரை வசூலிக்கலாம். வென்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யு. படுக்கைகளுக்கு 18,000 ரூபாய் வரை வசூலிக்கலாம்.

கரோனா செலவுகளுக்கான மருத்துவ காப்பீடு விவரம்

கரோனா சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுக்கு 8,000 ரூபாயும், வென்டிலேட்டர் இல்லாத ஐ.சி.யு. படுக்கைகளுக்கு 13,000 ஆயிரம் ரூபாயும், வென்டிலேட்டருடன் ஐ.சி.யு. படுக்கைகளுக்கு 15,000 ரூபாயும் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தச் செலவுகள் எல்லாம் சேர்க்கப்படும்?

ஆலோசனை, நர்சிங் கட்டணங்கள், அறை மற்றும் உணவுக் கட்டணம், கோவிட்-19 பிரசோதனைக் கட்டணம், கண்காணிப்பு, பிசியோதெரபி, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு மேற்கொள்ளப்படும் செலவுகள் இதில் சேர்க்கப்படும்.

கரோனா செலவுகளுக்கான மருத்துவ காப்பீடு விவரம்

எவை சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது?

உயர் ரக மருந்துகளின், MRI மற்றும் PET ஸ்கேன் உள்ளிட்டவை இதில் சேர்த்துக்கொள்ளபட மாட்டாது என்று பொது காப்பீட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண விகிதங்களை பொது காப்பீட்டு கவுன்சில் மாதந்தோறும் பரிசீலனை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு - அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை

ABOUT THE AUTHOR

...view details