தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வருமான வரி தாக்கல்: கால அவகாசம் நீட்டிப்பு - income tax return latest news

டெல்லி: வருமான வரியைத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார்-பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை இணைப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADAR CARD
ADAR CARD

By

Published : Jun 25, 2020, 8:46 AM IST

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.

அதேபோன்று, 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், உங்கள் வருமான வரி கணக்கோடு நிரந்தர கணக்கு எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான காலக்கெடு 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை: கோடி மதிப்புள்ள சந்தையை சீனாவிடம் ஒப்படைக்கும் முயற்சியாகும்!

ABOUT THE AUTHOR

...view details