தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அநீதியைக் கண்டு அஞ்சாமல் போரிட வேண்டும்' - ராகுல் காந்தி - 'Fight against injustice, don't be afraid': Rahul Gandhi

டெல்லி: ஆங்கிலேயர்களுக்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 78ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அநீதியைக் கண்டு அஞ்சாமல் அதனை எதிர்த்து போரிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Aug 8, 2020, 4:58 PM IST

ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மும்பை மாநாட்டில் இறுதிக் கட்டமாக வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

செய் அல்லது செத்து மடி என்ற காந்தியின் முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தில் கலந்துகொண்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திரத்திற்கு வழிவகுத்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 78ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 78ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு காந்தியின் ’செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்திற்கு புதிய அர்த்தத்தை தந்தாக வேண்டியிருக்கிறது. அநீதியைக் கண்டு அஞ்சாமல் அதனை எதிர்த்து போரிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆஷா தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்திய அரசே காரணம் - ராகுல்காந்தி!

ABOUT THE AUTHOR

...view details