கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் தேவையும் தற்போது வெகுவாக அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கு கடிவாளம் போடும் வகையில் பிக்கி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணங்கள் மூன்று பிரிவுகளின் கீழ் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பிரிவாக அரசு ஆலோசனை செய்த நோயாளிகள், இரண்டாம் பிரிவாக சொந்த பணம் செலுத்தும் நோயாளிகள், மூன்றாம் நபர் நிர்வாகத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நோயாளிகள் என பிரிக்கப்பட்டுள்ளனர்.
முதல் பிரிவினருக்கு: தனிமை வார்டுகளில் படுக்கை கட்டணம் ரூ. 13,600, ஐ.சி.யூவில் ரூ. 27,088, ஐ.சி.யு வென்டிலேட்டர் கட்டணம் ரூ. 36,853 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.