ஃபெமினா மிஸ் இந்தியா 2019-இன் இறுதிச்சற்று மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹார், மனுஷி சில்லர் தொகுத்து வழங்கினர்.ஃபெமினா மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவுக்கு மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற அனுக்ரதே வாஸ் முடிசூட்டிவிட்டார்.மேலும் ஸ்ரேயா ஷங்கர் மிஸ் இந்தியா ஐக்கிய கண்டங்கள் 2019 என்ற பட்டத்தையும், ஷிவானி ஜாதவ் மிஸ் கிராண்ட் இந்தியா 2019 பட்டத்தையும் வென்றுள்ளனர்.
மிஸ் இந்தியா பட்டம் வென்ற ராஜஸ்தான் அழகி! - சுமன் ராவ்
ஃபெமினா மிஸ் இந்தியா 2019 பட்டத்தை ராஜஸ்தான் அழகி சுமன் ராவ் வென்றுள்ளாா்.
பெமினா மிஸ் இந்தியா 2019
இந்நிகழ்ச்சிக்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக பாலிவுட் நட்சத்திரங்கள் கத்ரீனா கைஃப் ,மவுனி ராய், விக்கி கவுசல் உள்ளிட்டோர் நடனம் ஆடினார்கள். மேலும் திரைப்பட பிரபலங்கள் ஹுமா குரேஷி,தியா மிர்ஸா,சித்ரங்காடா சிங் வருகை தந்தனர்.
மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவ் பட்டாயாவில் நடக்க இருக்கும் உலக அழகி 2019 போட்டிக்கு இந்தியா சார்பாக பங்கேற்கவுள்ளார்.