தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் மக்களுக்கு லல்லு எழுதிய கடிதம்!

பாட்னா: ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலநிலைக்கு, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசுதான் காரணம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மக்களுக்கு லல்லு எழுதிய கடிதம்!
பீகார் மக்களுக்கு லல்லு எழுதிய கடிதம்!

By

Published : Jun 13, 2020, 4:32 PM IST

பிகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ஜூன் 11ஆம் தேதியன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

மாட்டு தீவன ஊழல் வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு, தனக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லாலு கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிகார் மக்கள் துக்கத்திலும் வேதனையிலும் உள்ளனர். அவர்கள் வசதிகள் இல்லாத நிலையில் வாழ்கிறார்கள். பலர் சாலைகளில் நடந்து இறந்துபோகிறார்கள்.

அழுகிற தொழிலாளர்களின் அவலநிலையை நான் கேட்கும்போதெல்லாம், ஆழ்ந்த சோகத்தை என்னுள் உணர்கிறேன். 'ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் உங்களுடன்தான் இருக்கிறேன்'

ஆனால், எனது சூழ்நிலைகளால் நான் உதவியற்றவனாக இருக்கிறேன். சதித்திட்டங்களால் நான் சிக்கிக்கொண்டேன். மக்களுக்கு உதவியற்றவர்களாக இருப்பவர்களை நினைத்து நான் வருந்துகிறேன்.

நான் பிகாரில் இருந்திருந்தால் மக்களுக்குத் தேவைகளுக்காக முயற்சிகள் எடுத்திருப்பேன். எனது மகன் தேஸஜ்விக்கு கட்சியின் பொறுப்பை நான் வழங்கியுள்ளேன். அதிகாரத்திற்கு வெளியே இருந்தாலும் எனது ராஷ்டிரிய ஜனதா தளம் குடும்பம், மக்களால் உறுதியுடன் நிற்கிறது என்பது எனக்கு நிம்மதி அளிக்கிறது.

ஏழைகள், சுரண்டப்பட்டுபவர்கள், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் விடாமுயற்சியுடனும், மனதார பணியாற்றியுள்ளேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எனது பிகார் பூர்வீக மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய நான் அனைத்து முயற்சியையும் செய்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இறந்தவரின் உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற அவலம்!

ABOUT THE AUTHOR

...view details