தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் முடிவால் கிரிக்கெட் வீரரின் மனநிலையை உணர்ந்த சசி தரூர்! - sasi tharoor

கிரிக்கெட் வீரர் 100 ரன்கள் எடுத்தும் அந்த அணி தோற்கும் போது ஏற்படும் மனநிலையே, தற்போது தனக்கு உருவாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூர்

By

Published : May 23, 2019, 5:37 PM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசி தரூர் களமிறங்கினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரனை விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் பெற்று வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது. குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் பாஜக முன்னிலையில் உள்ளது.

ஆனால், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் 72 சதவீதம் வாக்கு எண்ணும் பணி முடிவடைந்த நிலையில், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலை உள்ளபோதும், காங்கிரஸ் கட்சியால் மத்தயில் ஆட்சி அமைக்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை பார்க்கும் போது கிரிக்கெட் வீரர் 100 ரன்கள் எடுத்தும் அந்த அணி தோற்கும் போது ஏற்படும் மனநிலையே, தற்போது தனக்கு தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details