புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உணவு சேமிப்பு கிடங்கில் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்று வருகிறது. அத்தோடு புதுச்சேரி சரக்கு ரயில் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியும் நடைபெற்றதுடன், இந்த போக்குவரத்து மூலம் வரும் பொருள்கள் சேமிப்பு குடோனில் சேமிக்கப்பட்டடு வந்தது. இந்தப் பணிகளை மத்திய அரசு தற்போது முற்றிலும் நிறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரை ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து உப்பளம் தொகுதி ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய அரசின் உணவு பொருள் சேமிப்பு கிடங்கை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் கூறுகையில், ”முதலமைச்சர், மாநில ஆளுநர், சமூக நலத்துறை அமைச்சர் மத்திய அரசிடம் பேசி புதுச்சேரிக்கு நேரடியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மற்றும் மாநிலத்துக்கு தேவையான பல்வேறு தளவாட பொருள்கள் வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரி ரயில் நிலையம் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் வழங்கப்படும் அரிசி, பருப்பு புதுச்சேரி மாநிலத்துக்குள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படாமல், அருகே உள்ள தமிழ்நாடு பகுதியான கண்டமங்கலத்திலுள்ள சரக்கு ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடோன்களில் சரக்குகள் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்தே விநியோகிக்கப்பட்டது.