ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் 1955 குடியுரிமைச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த மசோதாவானது, இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதென பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அமெரிக்க நாட்டின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், " குடிரிமை சட்டத்திருத்த மசோதா, இந்தியாவின் மதச்சார்பற்ற, பன்மைவாதத்தை அரவணைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகும். நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடும்.
இதன் மூலம், லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியக் குடியுரிமையை இழக்க நேரிடும். ஆணையத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி அமெரிக்க அரசை முறையிடுவோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 38 பேருடன் மாயமான சிலி ராணுவ விமானம்; தேடும் பணிகள் தீவிரம்!