ஹிமாலச்சலப் பிரதேசம் சோலன் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ். இவரது மகன் சுபம். இவர்கள் இருவரும் இணைந்து சிறிய கடை ஒன்றினை நடத்தி வருகின்றனர். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இருவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
ஊரடங்கினை உபயோகமாக பயன்படுத்த எண்ணிய இவர்கள், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்துவரும் தங்கள் பகுதி மக்களுக்கு உதவ முன்வந்தனர். அதற்காக முப்பது ஆண்டு பழமையான கிணறு ஒன்றினை தூர்வார முடிவுசெய்தனர்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க ஊரடங்கை பயன்படுத்திய தந்தை மகன் நீண்ட நாள்களாக தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால் அந்தக் கிணற்றிணை மக்கள் குப்பைகள் கொட்டுவதற்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் இணைந்து கிணற்றிலுள்ள குப்பைகள் அனைத்தையும் அகற்றி, முழுவதுமாக சுத்தம் செய்து, அவற்றில் குடிநீரை நிரப்பியுள்ளனர். இதனைக் கண்ட மக்கள் பலரும் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்களை தூய்மைப்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் செயலை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் - ஐசிஎம்ஆர் இணை இயக்குநர் பிரதீப் கெளர்