இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஒடிசா மாநிலம் புர்ஜா பஞ்சாயத்துக்குட்பட்ட புஜாரிகுடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாகரம் லோஹர். இவர் தனது மனைவி சனாமதியை அங்குள்ள கோயில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோயிலின் அருகே சென்றதும் மனைவியிடமிருந்து வலுக்கட்டாயமாகக் குழந்தையைப் பிடுங்கி, அங்கிருந்த இரு நபர்களுக்கு 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
மது வாங்க ஒன்பது மாத குழந்தையை விற்ற தந்தை
நபாரங்பூர்: ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் மதுபானம் வாங்கத் தனது ஒன்பது மாத குழந்தையை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது வாங்க ஒன்பது மாத மகனை விற்ற தந்தை
இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால் அவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்ததால் இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுபானம் வாங்க, பெற்ற குழந்தையையே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.