தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அழாத நான் தூங்கனும்' - 8 மாத குழந்தையைக் கொலைசெய்த தந்தை! - tamil news

காந்திநகர்: குழந்தை அழும் சத்தத்தை தாங்க முடியாமல் தந்தை கொலைசெய்த கொடூர சம்பவம் சூரத்தில் அரங்கேறியுள்ளது.

sd
sdsdsd

By

Published : May 13, 2020, 10:58 AM IST

மனக் கஷ்டங்களை ஒரு நொடியில் மாற்றும் தன்மை கொண்டவர்கள் குழந்தைகள். அவர்களின் சிறு புன்னகையும், விளையாட்டுத்தனத்தையும் பார்க்கும்போது, நாமும் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் நமக்கு வராமல் இருக்காது. ஆனால், குஜராத் மாநிலத்தில் அழுத குழந்தையைக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சூரத் நகர், ரேஷம்வாத் பகுதியில் வசித்து வருபவர் உவேஷ் ஷேக். இவருக்கு மசூம் என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு, உவேஷ் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரின் அருகில் அமர்ந்திருந்த குழந்தை அழுது கொண்டிருந்துள்ளது. குழந்தை சத்தம் போட்டு அழுததால், அவரின் தூக்கம் கலைந்துள்ளது. இதனால் அவர் குழந்தையிடம் "அழுகாதே" எனக் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த உவேஷ், சிறிதும் இரக்கமின்றி குழந்தையின் தலையைப் பிடித்து தரையில் தள்ளிவிட்டு, கண்டுகொள்ளாமால் உறங்கியுள்ளார். இதில் பிறந்து எட்டே மாதங்களான அப்பாவி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதைப் பார்த்த உவேஷ் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உவேஷ் ஷேக்கை கைது செய்தனர்.

இதையும் படிங்க:நகராட்சி ஊழியரை வெட்டிய பாமக பிரமுகர் கைது - நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details