ஒடிசா மாநிலம் நப்ராங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹாபிரயான் பாஹன். இவரின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் தந்தை காலமானார். இறந்தவரின் உடலை வீட்டிற்குக் கொண்டுசெல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருந்திருக்கிறது.
அதன்பிறகு, தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுசென்று இறுதி மரியாதை செலுத்த எண்ணிய மஹாபிரயான், தன் பைக்கில் அவரது உடலை கட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இந்தச் சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.