தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கை கூடாத திருமணம்; பெற்ற மகளையே தீ வைத்து எரித்த தந்தை! - எரித்த

லக்னோ: திருமணம் செய்து வைக்க முடியாமல், பெற்ற மகளையே தந்தை தீ வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம், உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளை எரித்த தந்தை

By

Published : Mar 25, 2019, 9:07 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முக்தியார். இவர் தன்னுடைய மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலில் சொற்பமான சம்பளத்தில், குடும்பத்தை வழிநடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய மூத்த பெண்ணுக்கு, திருமண வரம் பார்த்து வந்துள்ளார்.

ஆனால், மாப்பிள்ளை வீட்டார், அதிக வரதட்சனையும், ரொக்கமும் எதிர்பார்த்தனர். இதனை முக்தியார் கொடுக்க முடியாததால், திருமணம் கைகூடாமல் இருந்து வந்துள்ளது. இரண்டு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்தும் பெண்ணுக்கு திருமணம் நடக்காததால், முக்தியார் மற்றும் அவரது மகன்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், திருமணம் பிரச்னையாக இருக்கும் மூத்த பெண்ணை, தந்தை முக்தியாரும் அவரது இரண்டு சகோதர்களும் கொலை செய்ய முடிவெடுத்தனர். இன்று வீட்டில் தனியாக இருந்த மூத்த பெண் மீது முக்தியார் உட்பட மூவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்தனர்.

உடல் முழுவதும் தீ பரவியதால், வலியால் அலறிய பெண்ணை, இளைய சகோதரர் சலிம், தாயார் ஆகியோர் காப்பாற்றி, அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரர் சலீம், தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல், தந்தையே மகளை தீ வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம், உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details