ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர சிங். இவருக்கு கெளதம் சிங் (24) என்ற மகன் உள்ளார். தந்தை-மகனிடையே நீண்ட நாள்களாகப் பணம் தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கெளதம் சிங் நேற்று வழக்கம்போல் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரமறுத்ததால் கோபமான கெளதம், தனது தந்தையை அடித்துக் கொலைசெய்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.