மக்களவைத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபருக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை அப்துல்லா இன்று தாக்கல் செய்தார்.
ஃபருக் அப்துல்லா மனு தாக்கல் செய்தார்! - ஃபருக் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதியில் ஃபருக் அப்துல்லா மனு தாக்கல் செய்தார்.

மனுதாக்கல் செய்த அப்துல்லாவுடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்தத் தலைவருமான உமர் அப்துல்லா உடன் இருந்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கமாக பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர் செய்திருந்தனர்.
12 லட்சம் வாக்காளர்கள் மேல் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஸ்ரீநகர் தொகுதியில் 1980, 2009ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களிலும், 2017 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் ஃபருக் அப்துல்லா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.