தமிழ்நாடு

tamil nadu

'பொருளாதாரத்தை மீட்க விவசாயிகள் உதவுவார்கள்'

சண்டிகர்: கரோனாவால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க விவசாயிகள் உதவுவார்கள் என இந்திய கோதுமை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஞானேந்திர பிரதாப் கூறியுள்ளார்.

By

Published : May 30, 2020, 2:11 AM IST

Published : May 30, 2020, 2:11 AM IST

பொருளாதாரத்த்தை மீட்க விவசாயிகள் உதவுவார்கள்'
பொருளாதாரத்த்தை மீட்க விவசாயிகள் உதவுவார்கள்'

இந்தியா கோதுமை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஞானேந்திர பிரதாப், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில்,

"கரோனா நேரத்தில், நாடு முழுவதும் அனைத்துத் துறைகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆனால், விவசாயம் சற்று பரவாயில்லை. 2010 - 2020ஆம் ஆண்டில் கோதுமை 107.2 மில்லியன் டன் உற்பத்தியிருக்கும். இதனால் கரோனாவால் துவண்டுபோன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க விவசாயிகள் உதவுவார்கள்.

கோதுமை

விவசாயம்தான் நாட்டில் ஒரே நல்ல வளர்ச்சியைக்காட்டி வருகிறது. ஹெச் 3086, டபிள்யூ 187, டபிள்யூ 222 உள்ளிட்ட கோதுமையில், நான்கில் இருந்து ஐந்து புது ரகங்களின் விதைகளை இந்திய கோதுமை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உற்பத்தி செய்ததின் விளைவாக, இந்த ரக கோதுமைதான், நாட்டில் 60 விழுக்காடு உற்பத்தியாகி வருகிறது.

கோதுமை டபிள்யூ187 ரகம்

டபிள்யூ 222 ரகம், ஒரு ஹெக்டருக்கு 82 குவிண்டால்களும்; டபிள்யூ 187 ரகம் ஒரு ஹெக்டருக்கு 80-85 குவிண்டால்களும்; ஹெச்டி 3086 ரகம் - ஒரு ஹெக்டருக்கு 72 குவிண்டால்களும் தரக்கூடியது.

கோதுமை உற்பத்தியின் தரத்தை மேலும் உயர்த்தி வருகிறோம். அத்துடன் புது ரக கோதுமை விதைகளை உற்பத்தி செய்ய முயற்சித்தும் வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்திய கோதுமை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

இதையும் படிங்க:வெட்டுக்கிளிகள் தாக்கம்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மனு தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details