நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் விவசாயம் தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக குற்றஞ்சாட்டி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு-விவசாயிகள் பேச்சுவார்த்தை: ’சுமுகமான தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன்’ - முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்
சண்டிகர்: நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் மத்திய அரசுடனான விவசாயிகள் சங்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தையை பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் வரவேற்றுள்ளார்.
குறிப்பாக, இந்த மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்தது. அதன்படி பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்தை நடத்தினர். இதில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்றும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “இரு தரப்பிலும் சுமுகமான முடிவு எட்டப்பட்டு விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடுவார்கள் என நம்புகிறேன். ஏற்கனவே கரோனா நெருக்கடியால் சிக்கித்தவித்த பஞ்சாப் மாநிலத்திற்கு இவ்விவகாரம் கூடுதல் நெருக்கடியைக் கொடுத்தது. தற்போது மத்திய அரசுடனான விவசாயிகள் பேச்சுவார்த்தை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.