தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கிக்கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை - வங்கி கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வங்கியில் வாங்கிய கடனை அடைக்கக் கூறி அலுவலர்கள் கொடுத்த துன்புறுத்தலால் விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

விவசாயி தற்கொலை
விவசாயி தற்கொலை

By

Published : Mar 10, 2020, 1:19 PM IST

உத்தரப் பிரதேசம் சஹரன்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில், விவசாயி ஒருவர் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அந்தப் பணத்தை விவசாயி காலம் தாழ்த்தி திருப்பிக் கட்டிவந்தார். ஒருகட்டத்தில் அவரால் பணம் கட்ட இயலவில்லை.

இதனால், அந்த வங்கியின் அலுவலர்கள் இருவரும், விவசாயிடம் பணத்தைத் திருப்பிக் கட்டுமாறு கூறி துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த விவசாயி அந்த வங்கியின் எதிரே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர், அவரிடமிருந்து கிடைத்த கடிதத்தில், தான் தற்கொலை செய்துகொள்வதற்கு வங்கியின் அந்த இரண்டு அலுவலர்கள்தாந் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது மனைவி வேத்பால், இது குறித்து ஃபதேபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்த இரண்டு வங்கி அலுவலர்களையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பூர் ஸ்டேட் வங்கிக் கொள்ளை: குற்றவாளி டெல்லியில் கைது

ABOUT THE AUTHOR

...view details