உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த இயலாததால் கடந்த சில தினங்களுக்கு கடன் வாங்கிய வங்கியின் வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் பையிலிருந்த கடிதத்தின் அடிப்படையில், கணவரின் தற்கொலைக்கு வங்கி ஊழியர்களே காரணம் என்று அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.