டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் ஏற்கெனவே நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததையடுத்து இன்று மீண்டும் ஐந்தாம்கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மதியம் 2 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட முடிவெடுப்பார்கள் என்று தான் நம்புவதாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நான்காம்கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விவசாயிகள் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 10ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: கருப்பு கொடி ஏந்தி களத்தில் இறங்கும் திமுக!